Social Icons

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

யாழ். மாவட்ட வாகன இலக்கத் தகடு விவரங்கள் இணையத்தில்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை காலமும் பொது மக்கள் தாங்கள் விண்ணப்பித்த வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்குக் கிடைக்கப் பெற்றமை தொடர்பான
 விவரங்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே பார்வையிட்டு வந்தனர்.
அதை இலகுவாக்கும் முறையில் இணைய சேவை ஊடாகத் தற்போது யாழ்.மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அந்த விவரங்களை பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சேவையை www.jaffna.dist.gov.lk எனும் மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத் தளத்துக்குள் நுழைந்து வலது பக்க மூலையில் vehicle number plates என்ற தெரிவின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறையின் மூலம் வீட்டில் இருந்தவாறே தமது வாகன இலக்கத் தகடுகள் கிடைத்துள்ளனவா என்பதை அறிந்து கொண்டு திருப்திகரமான அரச சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

தேர்தல் வேட்பாளராக அவுஸ்திரேலியவில் யாழ் இளைஞர்

அவுஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் களமிறங்கவுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக 
அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இறுதி யுத்த காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் 
அமைப்பினை நிறுவியுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் ஒரு முன்னணி செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் பசுமைக்கட்சியின் வேட்பாளராக சிட்னி தெற்கு பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரோஸ்பெக்ட் (Prospect) தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் prospect தேர்தல் தொகுதியில் தமிழன் வேட்பாளராக
 போட்டியிடவுள்ளார்.திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 27 பேர் கைது!!!

யாழில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து தொழில்களில் ஈடுபட்டிருந்த இந்தியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு குறித்த இந்தியர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்பய்பட்டவர்களில் ஒருவர் விஞ்ஞான பட்டம் பெற்றுக் கொண்ட பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் ஜோதிடம் பார்ப்பதனை தொழிலாக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அச்சுவேலிப் பொலிஸ் பொறுப்பதிகாரி சாரதிகளுக்கு சட்ட நடவடிக்கை!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில், விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கை பின்பற்றப்படும்” என, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திவுல்வல தெரிவித்தார்.  
போக்குவரத்து சட்ட விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயற்பாடு, இன்று (16) வல்லை சந்தியில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
இதன்போது, வீதியில் பயணம் செய்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, சாரதிகளுக்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.   
தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், வல்லை பாலத்தின் ஊடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இதர வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திச் செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.   
மேலும், பாலத்தில் வழுக்கும் தன்மை காணப்படுவதால், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், மணித்தியாலத்துக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டும் எனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.  அதேபோல், அரசாங்கத்தால் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாரதிகள் தேவைற்ற நிலையில் மதுபானம் பயன்படுத்துதல், அதிக வேகம் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இன்றி பயணிப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியதாவது,  
“அச்சுவேலி பொலிஸ் பிரிவில், 24 மணிநேரமும் போக்குவரத்துப் பொலிஸார், வீதிச்சுற்று காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரதேசங்களுக்கு உள்ளாக நுழையும் வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சன்யம் இன்றி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்.   
“இதனால், அதிகளவு பணத்தைத் செலவு செய்யும் நிலை சாரதிகளான உங்களுக்கு ஏற்படும். இதனைக் கருத்திற்கொண்டு வீதிச் சட்டங்களைப் பின்பற்றி, போக்குவரத்தை மேற்கொள்ளவும்”
 எனத் தெரிவித்தார்.   
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாட்டில் புதிய கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்!

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவரை தளபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையாவை நியமிக்க இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பெயரைக் குறிப்பிட விரும்பாத உயர் மட்ட அதிகாரியொருவர்
 தெரிவித்தார்.
இலங்கை மத்திய பிரதேசமான கண்டியை சொந்த இடமாகக் கொண்ட ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கண்டி ரினிட்டி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.
இதனையடுத்து கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கெடட் அதிகாரியாக 1982 ஆம் ஆண்டு இணைந்து கொண்டு 1984 ஆம் ஆண்டு தனது கடற்படை அதிகாரி பட்டப்படிப்பை
 முடித்துக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் டார்ட்மவுத் ரோயல் கடற்படைக் கலாசாலைக்கு தெரிவான அவர் கடற்படை அதிகாரிக்கான விசேட பயிற்சிகளையும் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
இதன்போது பிரித்தானிய கடற்படையின் போர்க் கப்பல்கள் பலவற்றிலும் களநிலைப் பயிற்சிகளை முடித்துள்ளார். இதற்கமைய பிரித்தானிய போர்க் கப்பலான டெனரில் நில காலம் கடமையாற்றியும்
 உள்ளார்.
அதேவேளை கப்பல்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் அதிநவீன இலத்திரனியல் யுத்தம் குறித்தும் சிறப்புப் பயிற்சிகளை பிரித்தானிய கடற்படையிடம் பெற்றுக் கொண்டுள்ள ட்ரெவஸ் சின்னையா இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடற்படை நடத்திய பெரும்பாலான தாக்குதல்களிலும் 
முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஓரம் கட்டப்பட்டிருந்த சின்னையாவிற்கு, இலங்கை யின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதும் முக்கிய பதவி வழங்கப்பட்டது.
இதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டிற்கும் – கிழக்கு மாகாண கடற்படைத் தளபதிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் ரியர் அட்மிரல் ரெவிஸ் சின்னையா 
நியமிக்கப்பட்டிருந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
காலவரையின்றி இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் மூடல்

மாணவர் போராட்டத்தால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் வியாழக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
Image captionஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நண்பகல் 12 மணிக்கு பின்னர் மாணவர்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக அனைத்து உடமைகளுடன் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வழமைக்கு மாறான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக கவுன்சில் கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாக துனை வேந்தர் கலாநிதி 
த.ஜெயசிங்கம் கூறியுள்ளார்.
“இத் தீர்மானத்தின் படி திரிகோணமலை வளாகம் தவிர வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு மருத்துவ பீடம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்,” என்று 
அவர் கூறினார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து இரு மாதங்களுக்கும் மேலாக ஆர்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் 
ஈடுபட்டு வருகின்றனர்
Image captionஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் விடுதி வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் மாணவர்கள்.
தங்கள் போராட்டத்தின் ஒரு வடிவமாக கடந்த வாரம் நிர்வாகக் கட்டடத் தொகுதியை முற்றுகையிட்ட மாணவர்கள், தொடர்ந்து இரவும் பகலும் அங்கே தங்கியிருந்தனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு 
நெருக்கடி நிலை எற்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

இராணுவமயமாகும் யாழ்ப்பாணம் களமிறக்கப்பட்ட சிறப்பு கொமாண்டோக்கள்!

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
யாழில் செயற்படும் கடலோரக் காவல்படைக்கு உதவி வழங்கும் நோக்கில் சிறப்பு படையணி இறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 7ம் திகதி பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேரை சிறப்பு கொமாண்டோக்கள் கைது செய்திருந்தனர்.
மண் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்
 ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 21ஆம் திகதி வல்லிபுரக் கோவில் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்ற கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த ஒருவர் 
படுகாயமடைந்தார்.
இந்நிலையில் அந்தப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் இராணுவ தளபதியினால், சிறப்பு கொமாண்டோ படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் 
வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 1 ஜூலை, 2017

எப்படி தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது ஒரு உதாரணம்.

கொரியநாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி. அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.
இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள் நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.
அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி. அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை 
எழுப்பிவிட்டார்கள்.
பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று 
ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்டபோது அயோத்தியாவில் கடலே
 இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம், அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.
இதற்கேற்றார்போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.
இதை கொரியர்களும் ஏற்றுக்கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை 
ஏற்றுக்கொண்டார்கள்.
செம்பவளம், படகு மூலமாகச் செல்லும்போது படகை Balance செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.
தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை….
தொடர்ந்து தேடுவோம்.
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வியாழன், 29 ஜூன், 2017

தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை சிக்கவில்லை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இருப்பாராயின் நவம்பர் 27 மாவீரர் தின உரை ஆற்றுவார்
ஊடகங்களில்ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில்தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதிசனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.
களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.
தமிழீழத்தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது.ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இதுஇந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான்அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமானதமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன்ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான்போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன்உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்தமண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள்பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம்எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்கொடுத்திருக்கிறார்கள்.
தளபதிகளின்கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில்இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள்கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின்சம்மதித் துள்ளார்.
இதையடுத்து,மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம்குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத்தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாகவியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும்அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5000கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமானகரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படிஇருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்களராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின்மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்துவீரச்சமர் புரிந்தனர்.
தொடர்ந்துமுன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள்உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும்புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.
புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது.அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்குஅழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில்பிரபாகரனை ஏறச் செய்தனர்.
அதேவேளையில்,வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொருதற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது.மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ்அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்கவருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின்தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தன்குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயதுமகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதைகல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காகபாதுகாப்பாக வெளியேறினார் சூசை.
புலிகளின்அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களைமுன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்களராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேரஅதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலையவைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில்ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கைநெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து,முன்னேற் றத்தை முடக்கியது.
இதனால்பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாகவெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின்ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்களராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்துஇலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின்மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகையபடகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்துகிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தைஅடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.
சிங்களகடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வதுபுலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில்இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம்புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்குஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும்படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல்வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படைதனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.
ஞாயிறன்றுபுலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப்பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும்பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள்,எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியேமுன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்தபகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது.எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின்ஆயுதங்கள் உயிர் குடித்தன.
அந்தத்தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ்வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்கமுயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள்,ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட்லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ்வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசுமீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள்நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.
ஞாயிறுஇரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்டஅனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசுகொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.
வன்னிக்காட்டில்சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கிவைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்டபுலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவைகொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா,அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.
சிங்களராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூடகருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத்திரும்பிய கருணா, “மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க’ எனத் தனதுசகாக்களிடம் சொல்லி யிருக்கிறார். இந்தநிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியஅதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும்சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாகசிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களைமீடியாக்களுக்குக் கொடுத்தது.
பிரபாகரனின்தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும்கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சயனைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டியபடத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பலமுரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டுபிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாகஉறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.
தண்ணீரில்கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம்நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல்இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்தகமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்கமுடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.
சிங்களஅரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தவேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும்உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி,மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.
தன்னுடையபாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனேஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச்செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போதுசிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிகமுக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்குநம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.(மீள் பதிவு)

செவ்வாய், 16 மே, 2017

மீண்டும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை!

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பின் போதே, ஐரோப்பிய ஒன்றிய பிரநிதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

பாரிய அளவில் வரிச்சலுகைக் கிடைப்பதால், இலங்கையின் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் மலிவான விலைகளில் கிடைக்கும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலமாக இலங்கையின் 1,400 உற்பத்திகள் 17 நாடுகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 7 மே, 2017

அபிவிருத்தியும் தொலையும் கனவுகளும் – ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும்

ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையில் இருந்து விலகிக் கொள்கின்றன என்பது கலீல் ஜிப்ரான் அவர்களின் புகழ் பெற்ற வாக்கியம். தமிழ் சூழலில் அண்மை நாட்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை அவதானிக்கும் போது தவிர்க்க முடியாமல் இந்த வாக்கியம் நினைவிற்கு வந்து தொலைக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகையினை வழங்கக் கூடாது என்பதை கோரும் பிரேரணை கடந்த மாதம் 27ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக 436 பேரும் ஆதரவாக 119 பேரும் வாக்களித்திருந்தனர்.இலங்கையின் மனித உரிமை நிலைமைகளின் மாற்றம் ஏற்படவில்லை எனக் கருதும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை மீளவும் இலங்கைக்கு வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பிற்கு முன்பாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான குழு பிரசல்ஸிற்கு விஜயம் 
மேற்கொண்டிருந்தது.
இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சாமாதானப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த குழுவில் சுனில் ஹந்துன்நெட்டி , வாசுதேவ நாணயக்கார ஆகிய கடும் போக்குடைய அரசாங்க தரப்பு உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசிய முகமாக தன்னை அடையாளப்படுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் இடம்பெற்றிருந்தார்.
அதே சமகாலத்தில் நோர்வே மற்றும் சுவிஸ் அரசாங்கங்களின் அனுசரணையுடன் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்
புலம் பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத் தரப்புடன் ‘அபிவிருத்தி’ குறித்து பேச்சுவார்தை நடத்துகின்றார்கள்.
இலங்கைக்கு பாவவிமோசனம் பெற்று தரும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களை  தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் சந்திக்கின்றார்.
இந்த இரு நிகழ்வுகளும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றமையும் அந்த சந்திப்பு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை தடுக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட இராஜதந்திர நகர்வின் மையம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்வதும் அவ்வளவு சிரமமானதல்ல.
இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்வாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களின் இழந்த வாழ்வை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையினை யாரும் நிராகரிக்க முடியாது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் புலம்பெயர் தேசங்களில் இருந்து தாயகத்திற்கு சென்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள்,  பாடசாலை நலன்புரி சங்கங்கள், ஊர்ச் சங்கங்கள் என பல்வேறு அமைப்புகளும் தனி நபர்களும் தம்மாலான உதவித் திட்டங்களை அங்கு மேற்கொண்டு
 வருகின்றனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் பங்குபற்றுதலுடன்; ஏராளமான வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.
இந்த நிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தொழில் முனைவோரையும் வலிந்து அழைத்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுங்கள் என வேண்டி நிற்கும் இலங்கை அரசாங்கத்தின் இந்த தீடிர் கரிசனை குறித்து நாம் கூடுதல் கவனம்
 செலுத்த வேண்டும்.
இலங்கையின் தமிழ் மக்களின் உரிமைக்காக கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்த ஆயுதப் போராட்டம் 2009ம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் யுத்தத்திற்கான காரணம் இன்னமும் தீர்வு காணப்படாமலேயே தான் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்வதற்கு கூட இந்த அரசாங்கம் 
தயாரில்லை என்பதை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கு பொறுப்பான அமைச்சர் மனோ கணேசன் இங்கிலாந்தில் தெளிவாக தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற வடக்கு கிழக்கு இணைப்போ, சமஸ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கமோ, மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசரணைக்கான 
வாய்ப்போ இலங்கை அரசாங்கத்தால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது என்றும் இந்த உண்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெளிவாக தெரியும் அதனை அவர்கள் தமிழ் மக்களிடம் இருந்து மறைப்பது அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த பின்னணியில் இலங்கையின் அழைப்பில் அங்கு சென்று வந்த  புலம்பெயர் கனவான்கள் இலங்கை அரசாங்கத்துடன் புலம்பெயர் சமூகம் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று பாடம் நடத்தத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில கொல்லப்பட்ட பல இலட்சக்கணக்கான தமிழர்களின் 
கல்லறைகளை ஏறி மிதித்தவாறும், கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்ட தாய்மாரின்
 கண்ணீர் வழியும் முகங்களை முறைத்துப் பார்த்தவாறும், காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து போராடும் மக்களின் உணர்வுகளின் மீது காறி உமிழ்ந்தவாறும் நாம் இலங்கை அரசாங்கத்தோடு அபிவிருத்திக்காக கைகுலுக்க வேண்டும் என்று அவர்கள் எங்களிடம் 
கோருகின்றார்கள்.
யுத்தத்தால் பாதி;க்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாமல் இருக்கின்ற நிலையில் அபிவிருத்தி என்ற மையைப் பூசி காயங்களை மறைத்துவிடும் முயற்சிக்கு துணைவருமாறு அவர்கள் புலம்பெயர் சமூகத்தை அழைக்கின்றார்கள்.
நடந்தது நடத்து விட்டது இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்து என்ன புடுங்கப் போகின்றீர்கள் என்று பதில் கேள்வி கேட்டு இது போன்ற விசனங்களையும் விமர்சனங்களையும் அவர்கள் கடந்து சென்று விடுவார்கள். காரணம் அவர்கள்
 செல்வாக்கு மிக்கவர்கள், செல்வந்தர்கள், அவர்கள் சொன்னால் ஆமாம் சாமி போட, அவர்களுக்கு பின்னால் அலையும் கூட்டம் என என எல்லாம் பெற்றவர்கள் எல்லாம் வல்லவர்கள்.
இந்த ஆபத்தை பரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது அது குறித்து ஒரு சிறு எதிர்வினையினை கூட வெளிப்படையாக  ஆற்ற முடியாமல் முடங்கிப் கிடப்பது தான் எமது மிகப் பெரிய சோகம் அதுவே எமது
 பலவீனமும் கூட.
இலங்கையில் இப்போது எல்லாம் சுமூகமாகிவிட்டது என்ற தோற்றப்பாட்டை சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய தேவையை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது. அதற்காகவே அவர்கள் புலம்பெயர் சமூகத்தை நோக்கி நேசக்கரம் நீட்டுகின்றார்கள்.
இலங்கையில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் தோன்றி விட்டது நடந்தவற்றை மறந்து தமிழர்கள் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட தொடங்கிவிட்டார்கள் என்பதை உலகத்திற்கு அறிவிப்பதே இலங்கை அரசாங்கத்தின் பிரதான  நோக்கம்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களால் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜீ.எஸ்.பி பிச்சை கேட்கின்றார்.
மறுபுறும் சர்வதேச ரீதியில் இலங்கையின் மனித உரிமை மீறலகள் குறித்த சர்வதேச விசாரணையை கோரி வந்த கனேடிய தமிழர் பேரவையின் முக்கிய பிரமுகரும் கடந்த காலங்களில் மாவீரர் தினத்தை  தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உழைத்தவருமானவர் கொழும்பில் வெளிவிவகார அமைச்சரையும் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து அபிவிருத்தி குறித்து பேசுகின்றார்.
இவை எல்லாமே இலங்கை அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக மேடை ஏற்றப்படும் நாடகங்கள். ஆனால் அவற்றின் கதாபாத்திரங்களாக தமிழர்கள் நடிக்க 
வைக்கப்படுகின்றார்கள்.
இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் குறைவடையும் போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்று மேலதிகமான பல வெளிநாட்டு வரப்பிரசாதங்களும், முதலீட்டு வாய்ப்புகளும்
 அதிகரிக்கும் அதன் மூலமாக இலங்கை அரசாங்கம் தன்னை வலுவானதான மாற்றிக் கொள்ளும். தேற்கில் புதிய தொழில் முயற்சிகளும் அபிவிருத்திகளும் பாரிய அளவில் மேற்கொள்ளப்படும். வடக்கும் கிழக்கும் வழமைபோலவே தொடர்ந்தும் கவனிப்பாரற்று கிடக்கும்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் போடப்பட்டுள்ள கம்பள வீதிகளில் வழுக்கிக் கொண்டு சென்று வரும் வெளிநாட்டு தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவே 
தென்படும்.
ஆனால் அபிவிருத்தி என்பது வெறும் தார் வீதிகளில் இல்லை என்பதும் அது ஒட்டுமொத்தமான ஒரு சமூதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உண்மை பாவம் அவர்களுக்கு புரிவதே 
இல்லை.  2009ற்கு பின்னர் வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகளையும் வேறுபாடுகளையும் உற்று நோக்கி அவானித்தால் இந்த உண்மை தெளிவாக புலப்படும்.
இலங்கை அரசாங்கம் தன் மீதுள்ள பாவக் கறைகளை கழுவி தன்னை சுத்தீகரிப்பதற்கு கறைதுடைப்பான்களாக (விளக்குமாறு) தமழர்களை பயன்படுத்துகின்றது என்ற உண்மையை புரிந்து கொள்ளாமால் அங்கே எல்லாம் மாறிவிட்டது, அரசாங்கம் தரும் காணிகளில் நாங்கள் தொழிற்சாலை அமைத்து அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்பினையும் வாழ்வாதாரத்தையும்; வழங்குவோம் என்று பேசுவது மற்றுமொரு முள்ளிவாய்காலை நோக்கிய நகர்வாகவே
 கருதப்பட வேண்டும்.
இந்த அபிவிருத்திக்காகவா இத்தனை உயிர்களையும் உடைமைகளையும் தமிழினம் இழந்தது ?
கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்த யுத்தத்தினால் பல்வேறு இழப்புகளை சந்தித்த ஒரு இனம் இனி வரும் நாட்களில் ஒரு போதும் மீண்டெழவே முடியாத அளவிற்கு மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக
 மேற்கொண்டு வருகின்றது.
அதில் மிக முக்கியமானது தமிழர்களின் ஒன்று பட்ட பலத்தை இலலாதொழித்து தமிழர் தரப்பை பிரித்தாள்வது.
துரதிஸ்டவசமாக இந்த நோக்கத்தை இலகுவாக்கும் செயல்பாடுகளை தான் நமது தலைவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்து 
கொண்டிருக்கின்றார்கள்.
மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பியதாக சொல்லும் கனேடிய தமிழர் பேரவை ஏப்பிரல் மாதம் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவாகர அமைச்சரோடு கைகுலுக்குவது எவ்வாறான இராஜதந்திரம் என்பது புரிபடவே இல்லை.
சர்வதேச ரீதியில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தனது படைப்புகள் மூலம் கொண்டு சென்ற மாயா எனப்படும் மாதங்கள் அருள்பிரகாசத்தை அழைத்து கௌரவித்து வெள்ளி விழா கொண்டாடிய கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனமும் தனது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் நகர்வுகளுக்கு துணைபோய் நிற்கின்றது.
கனேடிய தமிழர்களின் வர்த்த முயற்சிகளை முன்னேற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு எவ்வாறு இலங்கை அரசாங்கத்தின் அரசியல் சூழலில் சிக்கிக் கொண்டது என்பதும் ஆராயப்பட 
வேண்டியுள்ளது.
யுத்தம் முடிந்து போயிருக்கலாம், யுத்தத்தினால் சேதமான கட்டிடங்கள் மீளக் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் யுத்தம் கொண்டு சென்ற உயிர்களை யாராலும் திருப்பி தர முடியாது,
 யுத்தம் களவாடிப் போன ஒரு தலைமுறையின் இளைமையை யாராலும் வாங்கிக் கொடுக்க  முடியாது, போராடப் புறப்பட்டு வாழ்வை தொலைத்துவிட்டு முன்னாள் போராளிகள் என்ற அடை மொழிகளோடு நாளாந்தம் அல்லலும் எமது சகோதர சகோதரிகளுக்கான தொலைந்து போன வாழ்வினை புன்னகைக்கும் உங்கள் முகங்களோடு விரியும் முகப்புத்தகப் புகைப்படங்களால் 
திருப்பிக் கொடுக்க முடியாது.
யுத்தத்தினால் தமது உறவுகளை இழந்து தவிக்கும் இலட்சக்கணக்கான மனித மனங்களுக்கு அபிவிருத்தி என்ற மூலாம் பூசிய சலுகைகள் மூலம் ஆறுதல் அளிக்க முடியாது.
ஒரு இனம் தனது விடிவிற்காக நடத்திய தியாக வேள்விக்கு நியாயம் சேர்ப்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் தார்மீகக் கடமை உண்டு. போராடி மடிந்தவர்களும், யுத்ததின் மடியில் வீழ்ந்தழிந்து போனவர்களும் அர்ப்பணித்த உயிர்களின் மதிப்பினை உங்களால் மதிப்பீடு 
செய்ய முடியாது.
எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களும் மீண்டும் வாழ்வதற்கான ஒத்துழைப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டியது எவ்வளவு தூரம் அவசியமானதோ அதேபோன்று இத்தனை வருடகால துன்பியல் வாழ்வினில் நாம் சந்தித்த அத்தனை அவலங்களுக்குமான நியாயமான தீர்வு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் 
அவசியமானது தான்.
இலங்கை அரசாங்கத்தின் ‘அபிவிருத்தி’ என்ற பசப்பு வார்தைகளில் எமது உரிமைகள் தொலைந்து போவததை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
தமது தரப்பில் உள்ள யுத்தக் குற்றவாளிகளையும்
 தமிழ்  மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்களையும் சர்வதேசத்திடம் இருந்து காப்பாற்றுவதற்கு சிங்கள் தேசம் ஒன்று பட்டு நிற்கின்ற நிலையினை தமிழர் தலைமைகள் தெளிவாக புரிந்து
 கொள்ள வேண்டும்.
தமிழர்களுக்கு குறைந்த பட்ச அதிகாரங்களை கூட வழங்க தயராக இல்லாத அரசாங்கத்தை நம்பி அவர்களின் மூலமாக அவர்கள் தரும் காணிகளில் புலம் பெயர் தமிழர்கள் தொழிற்சாலைகளை அமைப்பதும் முதலீடுகளை மேற்கொள்வதும் பாதுகாப்பானதா என்பதை நாம் சிந்தித்து 
பார்க்க வேண்டும்.
இந்த ஆபத்தான இலக்கினை நோக்கி தமிழர்களை பயணப்பட வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்பவர்கள் இந்த ஆபத்தை உண்மையில் உணராமல் இருக்கின்றார்களா ? அல்லது அதை தாண்டிய 
ஏதாவது அனுகூலங்களை அவர்கள் பெற முயல்கின்றார்களா என்பதையும் நாம் ஆராய வேண்டும்.
சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து காணப்படும் இன்றைய நிலையில் கூட தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு தயாரில்லாத இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பின்
 உதவியுடன் சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றால் எவ்வாறான விளைவுகளை தமிழினம் எதிர் கொள்ளும் என்பதையும் நாம் சநிதித்துப் பார்க்க வேண்டும்.
அவ்வாறான நிலை ஏற்படுமானால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஐநா மனித உரமை பேரவை , ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் இருந்து அகற்றப்படும்.
இது ஒட்டு மொத்த தமிழர் நலன்களுக்கும் பாதகாமன பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அதன் பின்னர் நாம் மீண்டும் சர்வதேச சமூகததின் ஒத்துழைப்பை பெற முடியாத சூனிய வெளிக்குள் தள்ளப்பட்டு விடுவோம் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழர்கள் ஒற்றுமையோடு எழுந்து நின்றால் மட்டுமே இந்த சவால்களை தமிழினம் எதிர் 
கொள்ள முடியும்.
தட்டினால்  மட்டும் தான் கதவுகள் திறக்கும், கதவுகள் திறந்தால் தான் தமிழர்களுக்கு நிலையான நிம்மதியான 
வாழ்வு மலரும்;.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 7 மார்ச், 2017

வேலையற்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் மீது வழக்கு தாக்கல்!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு பேரணியின் போது மாவட்டச் செயலக அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார்கள் எனவும் நிலைமையைக் குழப்பும் வகையில் நடந்துகொண்டார்கள் எனவும் பட்டதாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பட்டதாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ள பொலிஸார், வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரீ.கிஷாந்த் உட்பட ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர்கள் 4 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை கடந்த திங்கட்கிழமையன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெப்ரவரி 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் வரை சென்று கவனயீர்ப்பு பேரணி நடத்தினர்.
இவ்வேளையிலேயே, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கடமையில் நின்ற பொலிஸார் மற்றும் கடமையிலிருந்த மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்யவிடாது பட்டதாரிகள் கவனயீர்ப்புப் பேரணி நடத்தியர்கள். இடையூறு விளைவித்தார்கள்
 எனவும் சுமுகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்து கொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக நீதிமன்றத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் 
செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வரை போராடுவதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டம் 15ஆவது நாளாகத்
 தொடர்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

லண்டனிலிருந்து விடுதலைப் புலிகளின் சீருடையுடன் வந்த தமிழ் மகன்.!

 ஜெனிவாவில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும், இன அழிப்புக்கும் நீதி கோரி ஜெனிவாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவிய போதிலும், அதிகளவான புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் லண்டனில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடையுடன் வந்த புலம்பெயர் தமிழ் மகன் ஒருவர் அனைவரின் கவனத்தையும்
 பெற்றிருந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு சிவில் பாதுகாப்பு உத்தியோம்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணைத்துக்கொள்வதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை 
மேற்கொண்டுள்ளது.

இதில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் 200 முன்னாள் போராளிகளுக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மொழிக் கையாள்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் புனர்வாழ்வு பெற்ற சுமார் 3,500 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் 
சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 3,500 பேரில் 200 பேர் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணையவுள்ளனர்.
இவர்களுக்கு பொலிஸ் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
மேலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மொழிக் கையாள்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கும் இதன் ஊடாக தீர்வினை எட்டமுடியும் என்றும் அவர்நம்பிக்கை 
வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளதாக சந்திரரத்ன பல்லேகம
 குறிப்பிட்டார்.
பொலிஸ் சேவையில் ஏற்கனவே சுமார் 1950 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 6 மார்ச், 2017

குவைத்தில் சம்பளமின்றி பணி புரிந்த இலங்கைப் பணிப்பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்!

 சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்குவதாக குறித்த பெண்ணின் முதலாளி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 3300 தினார் பணம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
குறித்த இலங்கைப் பெண் சம்பளம் இன்றியே குவைத்தில் பணி புரிந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு
 செய்துள்ளார்.
பணத்தை சேமித்து வைத்து தருவதாக கூறிய முதலாளி, நான்கு வருடங்களாக இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்க மறுத்துள்ளார். சம்பளம் வழங்க மறுத்தமையால் குறித்த பணிப்பெண் அந்நாட்டில் செயற்படும் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்தார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடை தொடர்ந்தே குறித்த முதலாளி இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 3300 தினார் பணம் செலுத்துவதாக குவைத் நாட்டு பெண் உறுதியளித்துள்ளார்.
இலங்கைப் பணிப்பெண் தாய் நாட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்த போதே அவரது சம்பளம் மறுக்கப்பட்டது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது விருந்து நிகழ்வில்?

பல அரச திணைக்களங்களில் கிழக்கு மாகாணத்தின்  மதுவுடன் கூடிய விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த விருந்துபசார நிகழ்வில் அரச அதிகாரிகள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது போத்தலுக்கு முன்பாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளனவாம் .
குறித்த புகைப்படம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பணி புரியும் அரச அதிகாரிகள் என தெரியவருகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை பற்றிய சிந்தனை அனைவர் மத்தியிலும் அதிகம் பேசப்படுகின்றது.
மக்களை மது பாவனையில் இருந்து மீட்டெடுத்து நல் வழிப்படுத்த வேண்டிய அரச ஊழியர்கள் இவ்வாறு மதுப்பாவனையில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் வேதனையளிக்கும் செயலாக இருப்பதாக 
கூறப்படுகின்றது! 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 5 மார்ச், 2017

இலங்கையை தண்டிக்க ஐநாவில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அன்புமணி இராமதாஸ் ?

ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான இலங்கையின் செயல்பாடுகள் மனநிறைவு தரவில்லை  என்றும் ஆணையர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். ‘‘இலங்கையின் ஒப்புதலுடன் 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, கவலைக்கொள்ளும் அளவுக்கு மிகவும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் தீர்மானத்தை செயல்படுத்த  திட்டம் வகுக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைப்பது கட்டாயமான தேவை. இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் வகையில் உள்நாட்டு சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக
 திருப்பி அளிக்க வேண்டும், குடிமக்கள் விவகாரங்களில் இருந்து இராணுவம் முழுவதுமாக விலக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக செயலாக்க ஐநா மனித உரிமைகள் ஆணையரின் நேரடி அலுவலகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான ரோம்
 உடன்படிக்கையில் இலங்கை உடனடியாக கையொப்பம் இடவேண்டும். இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஐநா மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டின் பேரவை தீர்மானத்தில் நிலைமாற்ற நீதி பொறிமுறை என்பதை இலங்கை அரசு ஏற்றது. இதில் உண்மையை வெளிக்கொணர்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல், இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல், குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து 
அமைப்புகளை மாற்றுதல் என நான்கு அங்கங்கள் உள்ளன. ஆனால், உண்மை, பரிகாரம் என இரு வழிமுறைகளை மட்டுமே இலங்கை அரசு ஓரளவுக்கு ஏற்பது போன்று தெரிவதாகவும், குற்றவாளிகளைத் தண்டிக்காமல் தவிர்க்க முயல்வதாகவும் ஆணையர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். இலங்கை அரசே அமைத்த ஆலோசனைக் குழுவின் அறிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கை 
வலியுறுத்தியுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காமல் ஏமாற்ற இலங்கை அரசு நடத்தும் நாடகம் மனித உரிமை ஆணையர் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இதற்கு மேலும் இலங்கை அரசின் ஏமாற்று சதிகளுக்கு சர்வதேச சமூகம் பலியாகக் கூடாது. 2015-ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்குறுதிகளை
 முழுமையாக நிறைவேற்றாமல், 
ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாறாக, மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை தீவிரமாக்குவதுடன், ஐநா பொது அவைக்கும், பாதுகாப்பு மன்றத்துக்கும் இலங்கை விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பாக, இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது. மாறாக,  நீதியின் பக்கம் நிற்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை 
பேரவையில் 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை 
இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள - பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட - அனைத்து பரிந்துரைகளையும், உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தையும் இந்திய அரசு அதன் தீர்மானத்தில் முன்வைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை இலங்கை அரசு செயல்படுத்துவதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் விவாதிப்பதையும் உறுதி செய்யும்படி இந்தியத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, இலங்கை இறுதிப்போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட  போர்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தரும் நோக்குடன், இலங்கை சிக்கலை ஐநா பொது அவையின் மூலம் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கு கொண்டு செல்லும்படியும் ஐநா மனித உரிமை பேரவையை இந்தியா கோர வேண்டும். 
ஈழத் தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடாக கருதுவதாலும், ஈழத்தமிழரை தொப்புள் கொடி உறவாக இந்தியத் தமிழர்கள் கருதுவதாலும் அவர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான தார்மீக 
கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்  பொருத்தமான தீர்மானத்தைக் கொண்டு வந்து நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் கடமையை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று 
வலியுறுத்துகிறேன்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 3 மார்ச், 2017

ஈழத்தமிழர் நீதி: குழப்பமும் - தெளிவும் ;ஐ.நாவில்!

தற்போது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், வரும் மார்ச் 22ல் இலங்கை மீதான விவாதம் அங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் அடுத்தக் கட்டம் குறித்த தமிழர்களின் பார்வை இப்போது ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. இது வரவேற்க தக்கதாகும்.
இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை ஐ.நா பாதுகாப்பு அவைக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்தியில், "ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும்
"அதனை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு 28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது.
இதே கோரிக்கைதான் கடந்த 25.02.2017ல் சென்னையில் பசுமைத் தாயகம் நடத்திய ஐ.நா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன? UNHRC 34வது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் - கூட்டத்திலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குழப்பம் என்ன?
2015 ஐநா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தினை செயல்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், இந்த விவகாரத்தை ஐ.நா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்தனர். இது நியாயமான கருத்தே ஆகும்.
எனினும், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இன்னொரு தீர்மானமே வரக்கூடாது என்பது போலவும், இந்த விடயத்தை ஒரேயடியாக ஐ.நா மனித உரிமைப் பேரவை கைக்கழுவ வேண்டும் என்பது போலவும் சிலர் பேசத்தொடங்கினர்.
(அதாவது, பொதுச்சபைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட பின்னர், மனித உரிமைப் பேரவையில் வேலை இல்லை என்பதான தவறான புரிதல் உருவானது).
இதன் அடுத்தக்கட்டமாக, "இலங்கை மீது ஒரு தீர்மானத்தை முன் வைக்கப்போவதாக இங்கிலாந்து அரசு கூறுவதே தவறு" என்றும், அத்தகைய தீர்மானத்தை அந்த நாடு பின் வாங்க வேண்டும் 
என்றும் பேசினர்.
கடைசியில், "இன்னொரு ஐ.நா தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் தமிழினத் துரோகிகள்" என்கிற அளவுக்கு தவறான பிரச்சாரம் சென்றது.
'உண்மை என்ன?"
2015ஆம் ஆண்டில் வெளியான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவின் அறிக்கை (OISL) மீதான சர்வதேச நடவடிக்கைகளை - நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச்சபைக்கும், ஐநா பாதுகாப்பு அவைக்கும் - விரிவாக்க வேண்டும் என்பது சரியான 
வியூகம்தான்.
அதற்காக, ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து இதனை கைவிட வேண்டும் என்பது மிகத் தவறான வாதம் ஆகும்.
இப்போதைக்கு, ஜெனீவாவில் மட்டுமே இலங்கை விவகாரம் உயிர்ப்புடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்ற நீதி (transitional justice) விவகாரங்களில் உலகின் உச்சமான 
அமைப்பு இதுதான்.
இந்த அவையில் இலங்கை தொடர்ச்சியாக விவாதிக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதும் மிக மிக மிக அவசியம் ஆகும். இதற்கு வரும் மார்ச் 23 ஆம் நாளன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும்.
அப்படி ஒரு தீர்மானம் வராமல் போய்விட்டால், இனி இலங்கையை கேள்வி கேட்பதற்கு ஒரு பன்னாட்டு அரங்கம் இல்லாமலேயே 
பொய்விடும்.
எனவே, 'தீர்மானத்தில் என்ன இருக்கப்போகிறது' என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, 'புதிய தீர்மானமே தேவையில்லை' என்பது அல்ல.
மிகக் குறைந்த கோரிக்கையாக பார்த்தால் கூட, 2015 தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என்பதும், பழைய தீர்மானம் உடனடியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும்தான் முக்கியமானதாகும்.
அதே நேரத்தில், இந்த விவகாரத்தை ஐ.நா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்கிற தமிழர்களின் கோரிக்கைக்கு 47 உறுப்பு நாடுகளில் ஒரே ஒரு நாடு கூட இதுவரை ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
"குழப்பம் தவிர்க்க வேண்டும்"
ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தினை ஐ.நாவினை இலக்காக வைத்து நடத்தும் போது, பல தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.
குழப்பம் 1. போர்க்குற்றம் என்று
 சொல்லாதே!
போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய மூன்றுமே கொடூரமான குற்றங்கள்தான் என்கிற நிலையில் 'போர்க்குற்றம்' என்று சொல்லாதே என்று சிலர் முழங்கினர்.
குழப்பம் 2. அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்!
இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை 2014-ல் அமெரிக்கா கொண்டு வந்தபோது - "அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்" - என்கிற பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சென்னையில் அமெரிக்க நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், அந்த தீர்மானத்தால் கிடைத்த விசாரணை அறிக்கைதான் (OISL Report 2015 http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx) இப்போது பன்னாட்டு அரங்கில் ஏற்கபட்ட ஒரே ஆயுதமாக உள்ளது.
2015ல் தற்போதைய தீர்மானத்தினையும் சிலர் எதிர்த்தார்கள். அதனை தீயிட்டுக் கொளுத்தினார்கள். ஆனால், இன்னமும் அந்த ஒரே தீர்மானம்தான் இந்த சிக்கலை சர்வதேச அரங்கில் 
நிலைநிறுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


 
Blogger Templates