Social Icons

செவ்வாய், 7 மார்ச், 2017

வேலையற்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் மீது வழக்கு தாக்கல்!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு பேரணியின் போது மாவட்டச் செயலக அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார்கள் எனவும் நிலைமையைக் குழப்பும் வகையில் நடந்துகொண்டார்கள் எனவும் பட்டதாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பட்டதாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ள பொலிஸார், வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரீ.கிஷாந்த் உட்பட ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர்கள் 4 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை கடந்த திங்கட்கிழமையன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெப்ரவரி 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் வரை சென்று கவனயீர்ப்பு பேரணி நடத்தினர்.
இவ்வேளையிலேயே, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கடமையில் நின்ற பொலிஸார் மற்றும் கடமையிலிருந்த மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்யவிடாது பட்டதாரிகள் கவனயீர்ப்புப் பேரணி நடத்தியர்கள். இடையூறு விளைவித்தார்கள்
 எனவும் சுமுகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்து கொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக நீதிமன்றத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் 
செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வரை போராடுவதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டம் 15ஆவது நாளாகத்
 தொடர்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates