Social Icons

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அச்சுவேலிப் பொலிஸ் பொறுப்பதிகாரி சாரதிகளுக்கு சட்ட நடவடிக்கை!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில், விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கை பின்பற்றப்படும்” என, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திவுல்வல தெரிவித்தார்.  
போக்குவரத்து சட்ட விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயற்பாடு, இன்று (16) வல்லை சந்தியில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
இதன்போது, வீதியில் பயணம் செய்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, சாரதிகளுக்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.   
தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், வல்லை பாலத்தின் ஊடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இதர வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திச் செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.   
மேலும், பாலத்தில் வழுக்கும் தன்மை காணப்படுவதால், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், மணித்தியாலத்துக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டும் எனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.  அதேபோல், அரசாங்கத்தால் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாரதிகள் தேவைற்ற நிலையில் மதுபானம் பயன்படுத்துதல், அதிக வேகம் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இன்றி பயணிப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியதாவது,  
“அச்சுவேலி பொலிஸ் பிரிவில், 24 மணிநேரமும் போக்குவரத்துப் பொலிஸார், வீதிச்சுற்று காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரதேசங்களுக்கு உள்ளாக நுழையும் வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சன்யம் இன்றி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்.   
“இதனால், அதிகளவு பணத்தைத் செலவு செய்யும் நிலை சாரதிகளான உங்களுக்கு ஏற்படும். இதனைக் கருத்திற்கொண்டு வீதிச் சட்டங்களைப் பின்பற்றி, போக்குவரத்தை மேற்கொள்ளவும்”
 எனத் தெரிவித்தார்.   
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates