Social Icons

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

யாழ். மாவட்ட வாகன இலக்கத் தகடு விவரங்கள் இணையத்தில்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை காலமும் பொது மக்கள் தாங்கள் விண்ணப்பித்த வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்குக் கிடைக்கப் பெற்றமை தொடர்பான
 விவரங்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே பார்வையிட்டு வந்தனர்.
அதை இலகுவாக்கும் முறையில் இணைய சேவை ஊடாகத் தற்போது யாழ்.மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அந்த விவரங்களை பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சேவையை www.jaffna.dist.gov.lk எனும் மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத் தளத்துக்குள் நுழைந்து வலது பக்க மூலையில் vehicle number plates என்ற தெரிவின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறையின் மூலம் வீட்டில் இருந்தவாறே தமது வாகன இலக்கத் தகடுகள் கிடைத்துள்ளனவா என்பதை அறிந்து கொண்டு திருப்திகரமான அரச சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

தேர்தல் வேட்பாளராக அவுஸ்திரேலியவில் யாழ் இளைஞர்

அவுஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் களமிறங்கவுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக 
அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இறுதி யுத்த காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் 
அமைப்பினை நிறுவியுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் ஒரு முன்னணி செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் பசுமைக்கட்சியின் வேட்பாளராக சிட்னி தெற்கு பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரோஸ்பெக்ட் (Prospect) தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் prospect தேர்தல் தொகுதியில் தமிழன் வேட்பாளராக
 போட்டியிடவுள்ளார்.



திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 27 பேர் கைது!!!

யாழில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து தொழில்களில் ஈடுபட்டிருந்த இந்தியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு குறித்த இந்தியர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்பய்பட்டவர்களில் ஒருவர் விஞ்ஞான பட்டம் பெற்றுக் கொண்ட பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் ஜோதிடம் பார்ப்பதனை தொழிலாக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அச்சுவேலிப் பொலிஸ் பொறுப்பதிகாரி சாரதிகளுக்கு சட்ட நடவடிக்கை!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில், விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கை பின்பற்றப்படும்” என, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திவுல்வல தெரிவித்தார்.  
போக்குவரத்து சட்ட விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயற்பாடு, இன்று (16) வல்லை சந்தியில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
இதன்போது, வீதியில் பயணம் செய்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, சாரதிகளுக்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.   
தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், வல்லை பாலத்தின் ஊடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இதர வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திச் செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.   
மேலும், பாலத்தில் வழுக்கும் தன்மை காணப்படுவதால், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், மணித்தியாலத்துக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டும் எனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.  அதேபோல், அரசாங்கத்தால் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாரதிகள் தேவைற்ற நிலையில் மதுபானம் பயன்படுத்துதல், அதிக வேகம் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இன்றி பயணிப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியதாவது,  
“அச்சுவேலி பொலிஸ் பிரிவில், 24 மணிநேரமும் போக்குவரத்துப் பொலிஸார், வீதிச்சுற்று காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரதேசங்களுக்கு உள்ளாக நுழையும் வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சன்யம் இன்றி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்.   
“இதனால், அதிகளவு பணத்தைத் செலவு செய்யும் நிலை சாரதிகளான உங்களுக்கு ஏற்படும். இதனைக் கருத்திற்கொண்டு வீதிச் சட்டங்களைப் பின்பற்றி, போக்குவரத்தை மேற்கொள்ளவும்”
 எனத் தெரிவித்தார்.   
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாட்டில் புதிய கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்!

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவரை தளபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையாவை நியமிக்க இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பெயரைக் குறிப்பிட விரும்பாத உயர் மட்ட அதிகாரியொருவர்
 தெரிவித்தார்.
இலங்கை மத்திய பிரதேசமான கண்டியை சொந்த இடமாகக் கொண்ட ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கண்டி ரினிட்டி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.
இதனையடுத்து கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கெடட் அதிகாரியாக 1982 ஆம் ஆண்டு இணைந்து கொண்டு 1984 ஆம் ஆண்டு தனது கடற்படை அதிகாரி பட்டப்படிப்பை
 முடித்துக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் டார்ட்மவுத் ரோயல் கடற்படைக் கலாசாலைக்கு தெரிவான அவர் கடற்படை அதிகாரிக்கான விசேட பயிற்சிகளையும் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
இதன்போது பிரித்தானிய கடற்படையின் போர்க் கப்பல்கள் பலவற்றிலும் களநிலைப் பயிற்சிகளை முடித்துள்ளார். இதற்கமைய பிரித்தானிய போர்க் கப்பலான டெனரில் நில காலம் கடமையாற்றியும்
 உள்ளார்.
அதேவேளை கப்பல்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் அதிநவீன இலத்திரனியல் யுத்தம் குறித்தும் சிறப்புப் பயிற்சிகளை பிரித்தானிய கடற்படையிடம் பெற்றுக் கொண்டுள்ள ட்ரெவஸ் சின்னையா இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடற்படை நடத்திய பெரும்பாலான தாக்குதல்களிலும் 
முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஓரம் கட்டப்பட்டிருந்த சின்னையாவிற்கு, இலங்கை யின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதும் முக்கிய பதவி வழங்கப்பட்டது.
இதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டிற்கும் – கிழக்கு மாகாண கடற்படைத் தளபதிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் ரியர் அட்மிரல் ரெவிஸ் சின்னையா 
நியமிக்கப்பட்டிருந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




காலவரையின்றி இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் மூடல்

மாணவர் போராட்டத்தால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் வியாழக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
Image captionஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நண்பகல் 12 மணிக்கு பின்னர் மாணவர்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக அனைத்து உடமைகளுடன் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வழமைக்கு மாறான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக கவுன்சில் கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாக துனை வேந்தர் கலாநிதி 
த.ஜெயசிங்கம் கூறியுள்ளார்.
“இத் தீர்மானத்தின் படி திரிகோணமலை வளாகம் தவிர வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு மருத்துவ பீடம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்,” என்று 
அவர் கூறினார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து இரு மாதங்களுக்கும் மேலாக ஆர்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் 
ஈடுபட்டு வருகின்றனர்
Image captionஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் விடுதி வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் மாணவர்கள்.
தங்கள் போராட்டத்தின் ஒரு வடிவமாக கடந்த வாரம் நிர்வாகக் கட்டடத் தொகுதியை முற்றுகையிட்ட மாணவர்கள், தொடர்ந்து இரவும் பகலும் அங்கே தங்கியிருந்தனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு 
நெருக்கடி நிலை எற்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

இராணுவமயமாகும் யாழ்ப்பாணம் களமிறக்கப்பட்ட சிறப்பு கொமாண்டோக்கள்!

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
யாழில் செயற்படும் கடலோரக் காவல்படைக்கு உதவி வழங்கும் நோக்கில் சிறப்பு படையணி இறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 7ம் திகதி பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேரை சிறப்பு கொமாண்டோக்கள் கைது செய்திருந்தனர்.
மண் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்
 ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 21ஆம் திகதி வல்லிபுரக் கோவில் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்ற கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த ஒருவர் 
படுகாயமடைந்தார்.
இந்நிலையில் அந்தப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் இராணுவ தளபதியினால், சிறப்பு கொமாண்டோ படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் 
வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






 
Blogger Templates